தேசிய கல்விக் கொள்கை 2020

உலகத்தரம் வாய்ந்த கல்வி, இலவசமாக, எளிமையாக, நாமும் நமது பிள்ளைகளும் படிக்க தமிழக மக்களாகிய நாம் புதிய தேசிய கல்வி கொள்கை - 2020 முழுமையாக அமல்படுத்த ஆதரிப்போம்

மின்னஞ்சல்

தேசிய கல்விக் கொள்கை முழுவதுமாக அமுல்படுத்த வேண்டி அரசுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Send Email

துண்டு பிரசுரம்

தேசிய கல்விக் கொள்கை பற்றிய துண்டு பிரசுரம் பதிவிறக்கம் செய்யவும் 

Download

கையெழுத்து படிவம்

தேசிய கல்விக் கொள்கை முழுவதுமாக அமுல்படுத்த உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த படிவத்தில் கையெழுத்து வாங்கி, படிவத்தில் உள்ள முகவரிக்கு அனுப்புங்கள்.

Download

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்

பள்ளிக்கல்வி

 • குழந்தையின் ஒட்டு மொத்த மூளை வளர்ச்சி 6 வயதிற்குள் 85% க்கு மேல் அடைந்துவிடுகிறது
 • அதனால் 3 வயது முதலே விளையாட்டு மூலம் கல்வி கற்றுக் கொடுக்கப்படும்
 • தாய்மொழி வழிக் கல்வி, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக்கு முக்கியத்துவம்
 • பள்ளியில் மதிய உணவோடு காலைச் சிற்றுண்டியும் வழங்கப்படும்
 • 3, 5, 8, ஆம் வகுப்புகளுக்கு கற்றல் திறனைக் கண்டறிந்து குறை தீர்க்கப்படும்
 • மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்றுக் கொள்ளலாம்
 • தொழிற் பயிற்சியுடன் கூடிய கல்வி
 • 10, 12 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு
 • கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 12-ம் வகுப்பு வரை

உயர்கல்வி

 • தரம், திறன் பகுப்பாய்வு, விமர்சன சிந்தனை, ஆராய்ச்சி மனப்பான்மை ஆகியவைகளை வளர்க்கும் வகையில் உயர்கல்வி
 • சான்றிதழ் (Certificate ), பட்டயச் சான்றிதழ் (Diploma ), இளநிலை பட்டம் (Degree ), ஆராய்ச்சியுடன் இளநிலை பட்டம் ( Degree with Research) ஆகிய எந்த நிலைவரை வேண்டுமானாலும் படிக்கலாம்
 • எப்போது வேண்டுமானாலும் மீண்டும் விட்ட படிப்பைத் தொடரலாம்.
 • உயர்கல்விக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு கல்வி நிறுவனம்
 • புதுத் தொழில் காப்பு மையங்கள் (STARTUP INCUBATION)
 • தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் (TECHNOLOGY DEVELOPMENT CENTRES)
 • முன்னணி ஆராய்ச்சிக்கான மையங்கள் (FRONTIER AREAS OF RESEARCH )
 • மேம்படுத்தப்பட்ட தொழிற்கல்வி நிறுவனங்கள் (INDUSTRY – ACADEMIC LINKAGES)

பொதுவானவை

 • உலகத்தரம் வாய்ந்த கல்வித் திட்டம்
 • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP) கல்விக்கான நிதி ஒதுக்கீடு 6% ஆக உயர்த்தப்படும்
 • பெண் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் கல்வி கற்க விடுதி வசதியுடன் கூடிய வளாகப் பள்ளிகள்
 • மறைக்கப்பட்ட புகழோங்கிய பண்டைய இந்தியாவின் விஞ்ஞான சாதனைகள், வீர வரலாறுகள், தியாகங்கள், மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்
 • கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், தேசபக்தி, இயற்கையைப் போற்றுதல், பெண்மையைப் போற்றுதல் போன்ற குணங்கள் மாணவர்களுக்கு ஊட்டப்படும்